tamilnadu

img

தூத்துக்குடியில் கொரோனா சிகிச்சை, சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துக ! சிபிஎம் வலியுறுத்தல்

தூத்துக்குடி, ஜூலை 25- கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் நெஞ்சு வலி காரணமாக இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் சுரேஷ்பாண்டி தந்தை செல்லத்துரை நெஞ்சு அனுமதிக்கப்பட்டு இருந்தார். உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று பணியில் இருந்த மருத்துவர் கூறி னார். மேலும் ஆம்புலன்ஸ் இல்லை என்று கூறிய அவர் சிறிது நேரத்தில் வரும் என்று கூறினார். இப்படியாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.   வெறும் ஆக்சிஜன் மட்டுமே செலுத்திய நிலையில் வேறு எந்தவித மான மருத்துவ சிகிச்சையும் அளிக் கப்படவில்லை. இதனால் திடீரென வலி அதிகமாகி கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலேயே அவர் உயிரி ழந்தார். ஆம்புலன்ஸ் வரும் வரும் என்று தாமதித்து உயிரிழப்பு ஏற்பட காரண மான தலைமை மருத்துவர் மீதும், ஆம்புலன்ஸ் பொறுப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் பங்கேற்ற பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு மறியல் போராட் டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டது.  

;