tamilnadu

பூ மார்க்கெட் மூடல்

தூத்துக்குடி, ஜூலை 27- தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இங்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் திங்கள் அன்று தெரியவந்துள்ளது. இதில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பூ மார்க்கெட் மூடப்பட்டு அப்பகுதி முழுவதுமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து பூ மார்க்கெட் தற்காலிக பேருந்து நிலைய்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.