tamilnadu

img

ரூ.15,000 நிவாரண நிதி வழங்க வலியுறுத்தல் ஆட்டோ தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

தூத்துக்குடி, மே 21- தமிழகத்தில் 4வது கட்ட ஊர டங்கு இந்த மாதம் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்க னவே 55 நாட்கள் கடந்து விட்ட சூழ்நிலையில் மேலும் இந்த அறி விப்பானது ஆட்டோ தொழி லாளர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆட்டோக்களின் சக்கரங்கள் சுழலாததால் ஆட்டோ தொழிலா ளர்களின் வாழ்க்கைச் சக்கரம் கடுமையான வறுமையும் நெருக் கடியையும் சந்தித்துள்ளது.இந்த நிலையில் மே 17க்கு பிறகு சமூக இடைவெளியை கடைபிடித்து ஆட்டோ இயங்க அனுமதிக்க வேண்டும் என ஆட்டோ தொழி லாளர்கள் சம்மேளனம் சார்பில் பலமுறை அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு கொடுத் தும் அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்படவில்லை.

நலவாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு மட்டும் அரசு நிவாரணம் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது ஆனால் நலவாரியத்தில் பதிவு செய்திட பல்வேறு விதிமுறைகள் காரணமாக 90 சதம் ஆட்டோ தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய முடியவில்லை. எனவே வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூ.15,000 ஊரடங்கு கால நிவாரண நிதியாக வழங்க கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் சிஐடியு ஆட்டோ தொழிலா ளர்கள் சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போரட்டம் தூத் துக்குடி, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம்,திருச்செந்தூர், எட்டயபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.போராட்டத்தில் இருநூறுக்கும் அதிகமான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

;