கொச்சி:
இந்தியாவின் சிறந்த நிர்வாக மாநிலமாக மீண்டும் கேரளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான பொது விவகார மையம் தொகுத்த பொது விவகார குறியீட்டின்படி, கேரளா இந்தியாவின் சிறந்த ஆளும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. சிறிய மாநிலங்களின் பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது.அரசாங்கத்தின் செயல்திறன், பொறுப்பேற்றல், சட்டத்தின் ஆட்சி, ஊழல் கட்டுப்பாடு ஆகியவற்றின் அளவுகோல்களின் அடிப்படையில் 13 வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முதல் 50 குறிகாட்டிகளை மதிப்பீடு செய்வதன் மூலம் சிறந்த நிர்வாக மாநிலமாக கேரளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் முதலிடத்தை கேரளம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.