tamilnadu

img

கொச்சியில் விதிமீறி கட்டப்பட்ட 19 அடுக்குமாடிக் குடியிருப்புகள் வெடிகுண்டுகள் மூலம் தகர்ப்பு

கொச்சி, ஜன.11- கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரடு பகுதியில் கடலோர ஒழுங்கு மண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி குடி யிருப்புகளில் இரண்டு கட்டடங்கள் வெடிகுண்டுகள் மூலம் ஒரு சில நொடிகளில் இடித்து தகர்க்கப் பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு களை இடிப்பதற்காக அந்த குடி யிருப்புகள் முழுவதும் வெடிபொ ருள்கள் நிரப்பப்பட்டு, ஒரே நேரத்தில் அனைத்தும் வெடிக்க வைக்கப்பட்டு கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. முன்னதாக, சனியன்று காலை 8 மணிக்கே, கட்டடத்தில் வெடிபொ ருட்கள் நிரப்பும் பணி நிறைவ டைந்தது. அந்த கட்டடங்கள் இருக்கும் சுற்றுவட்டாரப் பகுதி யில் 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டிருந்தது. தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரின் கண்காணிப் பில், ஹோலி பெய்த் எச்2ஓ மற்றும் அல்பா செரின் ஆகிய இரண்டு கட்ட டங்களில் வெடிகுண்டுகள் வைக்கப் பட்டு ஒரு சில நொடியில் இடித்து தகர் ்க்கப்பட்டது. அப்போது, கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் மிகப் பெரிய புழுதிப் படலம் ஏற்பட்டது. மரடு பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் இருந்தன. இந்த குடியிருப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த குடியிருப்புகளை இடிக்கு மாறு உத்தரவிட்டது. அதையடுத்து, அதற்கான பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வந்தது. இந்நிலை யில், குடியிருப்பை இடிக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

கட்டடங்களை இடிக்கும் பணியை முன்னிட்டு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து மக்க ளும் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டனர். எனினும், அனைத்து மக்களும் வெளியேறி விட்டனரா என்று காவல் துறையினர் ஒவ்வொரு வீடாகச் சென்று சோதனையிட்டனர். அந்த பகுதியில் ஆளில்லா விமா னங்கள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும். தடையை மீறி ஆளில்லா விமானங்கள் பறக்கவிடப்பட்டால் அவை சுட்டு வீழ்த்தப்படும். மேலும், இடிக்கப்படும் குடியிருப்பு கள் உள்ள பகுதியில் யாரும் நட மாட வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டிருந்தது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மரடு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. மின்சாதனப் பொருள்க ளை அணைத்து வைத்து விட்டு செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப் பட்டனர். நீர்வழி, வான்வெளி, சாலை வழி என அனைத்து போக்குவரத் துக்கும் அந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

;