tamilnadu

img

திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல வண்ணங்களில் காளான்கள்

திருவில்லிபுத்தூர், ஆக. 31 திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெளி உலகுக்கு  தெரியாத ஏராளமான மருத்துவ மூலிகைகளும் மருத்துவ செடிகளும் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் சாரல் மழை மற்றும் பரவலான மழை பெய்து வருகிறது. இந்த மழை  எதிரொலியாக வனப்பகுதியிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளிலும்  ஏராளமான இடங்களில் பல நிறங்களில் காளான்கள்   முளைத்துள்ளன இதுகுறித்து மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த சிலர் கூறும்போது வனப்பகுதியிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ச்சியாக சில நாட்கள் இடி மின்னலுடன் மழை பெய்தாலே பல நிறங்களில் பெரிய மற்றும் சிறிய அளவில் காளான்கள் வளர்வது வழக்கம். அந்த வகையில் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தினால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் பல  நிறங்களில் காளான்கள் முளைத்துள்ளன. ஆனால் இந்த காளான்களை உணவுக்கு பயன்படுத்த முடியாது என்றனர்.

;