tamilnadu

திருவாரூர், புதுக்கோட்டை , பெரம்பலூர் , தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

மூத்த தோழர் சுந்தர் காலமானார்
குடவாசல், ஆக.6- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் வேடம்பூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் வேடம்பூர் முன்னாள் கிளைச் செயலாளரு மான எம்.சுந்தர்(65) சில நாட்களாக உடல் நலம் இன்றி மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் திங்கள்கிழமை மாலை காலமானார்.  மறைந்த மூத்த தோழர் எம்.சுந்தர் சுமைதூக்கும் தொழி லாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவராக இருந்து திறம்பட செயல்பட்டவர். இவருக்கு பாப்பம்மாள் என்ற மனைவியும், 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனை வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், வர்க்க வெகு ஜன அமைப்புகளிலும் உள்ளனர். தோழரின் மறைவுச் செய்தி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மறைந்த மூத்த தோழர் சுந்தரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.ராதா மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்ரமணியன் மற்றும் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை வேடம்பூரில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மருத்துவ மதிப்பீட்டு முகாம்
புதுக்கோட்டை, ஆக.6- புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் புதுக்கோட்டை வட்டார வள மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலெட்சுமி தலைமை வகித்தார். குழந்தைகள் நல மருத்துவர் ஆசைத்தம்பி, மனநல மருத்துவர் ராஜேஷ்குமார், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஆறுமுகம், கண் மருத்துவர் முருகன், மூடநீக்கி யல் மருத்துவர் ராஜாராமன் ஆகியோர் அடங்கிய குழு வினர் மருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். மாவட்ட கல்வி அதிகாரி ராகவன், ஒருங்கி ணைந்த பள்ளி கல்வியின் உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்தி ரன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி வேல் பங்கேற்றனர்.

பெரம்பலூரில்  உழவர் கடன் அட்டை முகாம் 
பெரம்பலூர், ஆக.6- பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் நிதி தேவை களை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் நோக்கில் பொது உடைமை வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் உழவர் கடன் அட்டைகள்(கிசான் கிரெடிட் கார்டு) வழங்கப்படுகின்றன.  இந்த அட்டைகளை பயிர் சாகுபடி செய்வதற்காகவும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்புக்காகவும் கடன் பெற பயன்படுத்திக் கொள்ளலாம். பயிர் சாகுபடியை பொருத்த வரை நடப்பு மூலதனத்தின்(ளுஉயடந ழக குiயெnஉந) அள விலுமாக கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டை செல்லுபடியாகும் கால அளவு 5 ஆண்டுகள் மட்டுமே.  உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க உரிய சான்று டன் தேசிய வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி களில் ஆக.6- ஆம் தேதி முதல் இம்மாத இறுதி வரை நடை பெறும் சிறப்பு முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் 
தஞ்சாவூர், ஆக.6- தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறுகிறது. ஆக.7 பேராவூரணி அரசு மருத்துவமனையிலும், ஆக.8 ஒரத்தநாடு செயின்ட் மேரீஸ் நடுநிலைப்பள்ளியிலும், காலை 9 முதல் நண்பகல் 1 மணி வரை முகாம் நடை பெற உள்ளது.  ஆக.9 கும்பகோணம் அரசு மருத்துவமனை, ஆக.13 மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆக.14 திரு விடைமருதூர் அரசு மருத்துவமனை, ஆக.16 வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆக.20 திரு வோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆக.21 பூத லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆக.22 திருப்பனந் தாள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆக.27 அம்மா பேட்டை சுகாதார நிலையம், ஆக.28 அழகியநாயகிபுரம் சுகாதார நிலையத்திலும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

;