தஞ்சாவூர், ஜூலை 12 - தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர் கள் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக, ஒரு நாள், ஒரு நூல் வாசிப்பு இயக்கம் திங்கள்கிழமை துவங்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும். மாணவப் பரு வத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை எளி தில் வாசித்தல் உள்ளிட்ட செயல்பாடு களை மேம்படுத்த வேண்டும் என, “ஒரு நாள், ஒரு நூல்-வாசிப்பு இயக்கம்” என்ற நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சி ஜூலை 11 முதல் 15 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்நிகழ்ச்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக் குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் துவக்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து புத்த கங்கள் வாசித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.கே. வடிவேல், நேர்முக உதவியாளரான மேல்நிலை கே.பழனி வேலு, இடைநிலை இ.மாதவன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் அறிவியல், வர லாறு, இலக்கியம் சார்ந்த புத்தகங் களை வாசித்தனர். பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் செய்தியாளர் களிடம் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட் டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 729 பள்ளி களில், சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்று ஒரு வார காலம் வாசிக்க உள்ளனர். ஒரு மணி நேரம் வாசித்து முடித்தவுடன், மாணவர்களுக்கு அதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தவும், வாசிப்புத் திறனை அதிகப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக அமையும்” என்றார்.