tamilnadu

img

சேங்காலி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

குடவாசல்: பெற்றோர்களால் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா, மகளிர் தின விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சேங்காலிபுரம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றன. விழாவிற்கு தலைமை ஏற்ற ஆசிரியை து.இந்திரா வரவேற்றார். மகளிர் தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விதை பந்துகள் வழங்கப்பட்டன. கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்வாக கை கழுவும் முறைகள் மற்றும் நோயின் அறிகுறிகள், தடுக்கும் முறைகள் பாதுகாப்பு வழிகள் ஆகியவை எடுத்துக் கூறப்பட்டன. இலக்கிய மன்ற நிறைவு விழாவை முன்னிட்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாட புத்தகத்தில் உள்ள நீதியை நிலை நாட்டிய சிலம்பு பாடத்தை நாடக வடிவில் நடித்து காண்பித்தனர். நிகழ்ச்சியின் போது கல்வி சீர்வரிசையாக நாற்காலி, குடம், பாய்கள் மற்றும் பள்ளிக்கும் கல்விக்கும் தேவையான அனைத்து பொருட்களையும் பெற்றோர்கள் வழங்கினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.