tamilnadu

img

கொரோனா வார்டை மாற்றிடுக! சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 1-  ஒரே கட்டிடத்தில் இயங்குகிற கொரோ னோ வார்டை மாற்று இடத்தில் அமைத்திட வலியுறுத்தியும், கிராமப்புறங்களில் ஊரா ட்சி செயலாளர் தலைமையில் மருத்துவ குழு  அமைத்து வீடு, வீடாக சென்று கொரோனா பரி சோதனை செய்திட வலியுறுத்தியும், விவ சாயத்தை அழிக்க கூடிய பாலைவன வெட்டு க்கிளிகளை கட்டுப்படுத்திட வலியுறுத்தியும் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மா ர்க்ஸ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாசு, கே.தமிழ்மணி கண்டன உரை யாற்றினர். துணை வட்டாட்சியரிடம் கோரி க்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இந்தக் கோரிக்கைகளை மாவட்ட சுகாதார துணை ஆய்வாளர் ராஜமூர்த்தியிடம் நேரடி யாக சென்று கொரோனா வார்டினை அருகில் உள்ள அரசு உறுப்பு கல்லூரிக்கு மாற்ற க்கோரி அறிவுறுத்தினர்.

;