districts

img

பட்டியலின மக்கள் பயன்படுத்தி வரும் இடுகாட்டை தனியாருக்கு வழங்க முயற்சி சாணூரப்பட்டியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.12 -  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் சாணூரப்பட்டியில், பல தலைமுறைகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடுகாட்டை அப்புறப்படுத்த முயற்சிக்கும் அரசு நிர்வாகத்தை கண்டித்து, சிபிஎம் சாணூரப்பட்டி கிளை மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில் சாணூரப்பட்டியில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித் தார். இதில், சிபிஎம் மத்தியக் குழு  உறுப்பினர் உ.வாசுகி, சிபிஎம் மாவட்டச்  செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.அபி மன்னன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில், “சாணூரப்பட்டி மேலத்தெரு ஆதிதிராவிட மக்கள், தலைமுறை தலைமுறையாக பயன் படுத்தி வரும் இடுகாட்டை அப்புறப் படுத்தி, தனிநபருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனை ரத்து செய்து, இடுகாடு என அரசு கணக்கில் மீண்டும் கொண்டு வர  வேண்டும். இடுகாட்டை தனிநபருக்கு பட்டா போட்டு வழங்க முயற்சிக்கும் அரசு நிர்வாகத்தை கண்டித்தும், ஆர்ப் பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப் பட்டன.  தொடர்ந்து தெருமுனைப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சி  நிதி வழங்கப்பட்டது. மேலும், அப்பகுதி யைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கட்சித் தலைவர்கள் கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்ற னர்.