tamilnadu

திருவாரூர் , தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

குடிமராமத்து பணிகள் ஆய்வு 
திருவாரூர் ஆக18- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை பொதுப்பணித்துறை(நீர் வள ஆதார அமைப்பு) அரசு கூடுதல் செயலர் எம்.பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேட்டுப்பாளையம் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் மேட்டுப்பாளையம் வாய்க்கால் தலைப்பு மதகு கட்டுமான பணி, தட்டாங்கோவில் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் அய்யனார்கோவில் வாய்க்கால், தட்டாங்கோவில் வாய்க்கால் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணி ஆய்வு மேற்கொண்டார். 


மாநில விளையாட்டு போட்டி
திருவாரூர் ஆக18-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 20வது அனைத்து மண்டல பணியாளர்களுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டியை மாவட்ட உள்விளையாட்டு  அரங்கில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தொடங்கி வைத்தார். நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் மு.சுதாதேவி தலைமை வகிக்க, ஆட்சியர் த.ஆனந்த் முன்னிலை வகித்தார்.


விவசாயிகளுக்கு ‘சோலார் டிரையர்’ அமைக்க மானியம்
தஞ்சாவூர் ஆக.18- தஞ்சை மாவட்ட விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த விளைப் பொருட்களை, புதிய தொழில்நுட்பத்துடன் உலர்த்தி சந்தைப்படுத்த ஏதுவாக, விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலமாக சூரிய கூடார உலர்த்தி(சோலார் டிரையர்) 60 சதவீத மானியத்தில் அமைத்து தரப்படுகிறது. பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை  உதவி செயற்பொறியாளர் தஞ்சாவூர் இரவிந்திரன்(99943- 01233), கும்பகோணம் லெ.அய்யப்பன் (63838- 30644), பட்டுக்கோட்டை சி.எழிலன்(94436- 78621) ஆகியோரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.