திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசிப் பணிகள் பிப்.28-ம் தேதி முதல் 19-ம் தேதி வரைகிராம வாரியாக நடைபெறுகிறது. இதில் மருத்துவக்குழுவினர், அந்தந்த கால்நடைகளுக்கு கிராமங்களில் காலை 6 முதல் 9 மணி வரை, மாலை 3 முதல் 5 மணி வரையிலும் தடுப்பூசிப் பணி மேற்கொள்வர். இதில் 3 மாதத்திற்கு மேல்வயதுள்ள கன்றுகள், சினைப்பசு,கறவைப்பசு, எருமை களுக்கு தவறாமல் தடுப்பூசியினை போட்டுக் கொண்டு பயன் பெறுமாறும்,நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பினைத் தவிர்க்கவும் ஆட்சியர்த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.