மன்னார்குடி, மார்ச் 4- எனது கிராம மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டுமென்ற நூதன வரதட்சனை கேட்டு தஞ்சை மாவட்டம் ஒட்ட ங்காடு கிராமத்தைச் சேர்ந்த உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் சென்னை மரு த்துவரை மணந்துள்ளார். தஞ்சை மாவட்டம் பேரா வூரணியை அடுத்த ஒட்ட ங்காடு எனும் கிராமத்தைச் சேர்ந்த சிவகுருபிரபாகரன் என்பவர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக். முடித்து 2018-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 101-வது இடத்தையும், தமிழக அளவில் 3 ஆம் இடத்தையும் பிடித்து தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார். மேலும் ஏ.பி.ஜே. கிராம வளர்ச்சிக் குழுவை உரு வாக்கி அதன்மூலம் ஏரிகளை தூர்வாருவது, மருத்துவ முகாம் நடத்துவது என பல நலத்திட்டப் பணிகளை சமூக சேவையாகச் செய்து வருகி றார். இந்நிலையில் அவரு க்கு மணமுடிக்க அவரது பெற்றோர் பெண் பார்க்க தொடங்கியபோது பெண் மருத்துவராக இருக்க வே ண்டுமென்றும், நமது கிராமத்தில் ஊர்மக்க ளுக்காக இலவசமாக மரு த்துவம் பார்க்க வேண்டும் என்ற நிபந்தனையோடு பெண் பார்க்க வேண்டும் எனக் கூறினார். அதன்படி சென்னை நந்தனம் கல்லூரி கணித விரிவுரையாளர் திருமலைசாமியின் மகள் மருத்துவர் கிருஷ்ணபாரதி, மணமகன் வீட்டார் நிபந்த னையை ஏற்று திருமண த்திற்கு சம்மதம் தெரி வித்தார். அண்மையில் பேரா வூரணியில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து சிவகுரு பிரபாகரன் கூறும்போது, தான் விவசாயக் குடும்ப த்தைச் சேர்ந்தவனென்றும், கிராம வளர்ச்சிக்கு பல நல்ல திட்டப்பணிகளைச் செய்ய நோக்கில் சமூக சேவைகளை செய்து வருவதாகவும், எனது மனைவியும் இதுபோன்ற சேவையில் ஆர்வம் உள்ள வராக இருக்க வேண்டும் என நினைத்தேன். என்னுடைய விருப்பத்தை ஏற்றுக்கொ ண்ட கிருஷ்ணபாரதியை மண ந்துகொண்டேன் என்றார்.