tamilnadu

img

சிறந்த மருத்துவர் விருது

மன்னார்குடி ஆக.29-  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள மாவட்ட  அரசு தலைமை மருத்துவமனையில் கண் மருத்துவராக பணியாற்றி வரும் பி.கோவிந்தராஜ்க்கு தமிழக அரசு சார்பில் 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த மருத்துவருக்கான விருதினை சுகாதாரத்துறை மூலமாக வழங்கியுள்ளது. இவ்விருதை பெற்றதையடுத்து, மன்னார்குடி பொதுமக்கள், மருத்துவர்கள், அரசு தலைமை மருத்துவமனை அனைத்து பணியாளர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் இவரது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.