tamilnadu

திருவள்ளூர், ஈரோடு முக்கிய செய்திகள்

திருவள்ளூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்
திருவள்ளூர், டிச. 23-   திருவள்ளூர் மாவட்ட த்திற்குட்பட்ட 10 சட்டமன்றத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்  மாவட்ட ஆட்சியர் வெளி யிட்டார். 10 சட்மன்றத் தொகுதிக ளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:- கும்மிடிப்பூண்டி: ஆண்கள் 1 லட்சத்து 31 ஆயி ரத்து 293. பெண்கள் 13 லட்சத்து 69 ஆயிரத்து 56. இதர 33. மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 282. பொன்னேரி: ஆண்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 075. பெண்கள் 1 லட்சத்து 29 ஆயி ரத்து 710. இதர 63, மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 848. திருத்தணி: ஆண்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 323. பெண்கள் 14 லட்சத்து 07 ஆயிரத்து 66. இதர 27. மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 116. திருவள்ளூர்: ஆண்கள் 1லட்சத்து 17 ஆயிரத்து 952. பெண்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 931. இதர 23. மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 906.  பூவிருந்தவல்லி (தனி):  3 லட்சத்து 35 ஆயிரத்து 635. ஆவடி: 4 லட்சத்து 13 ஆயி ரத்து 246. மதுரவாயல்:  4 லட்சத்து 17 ஆயிரத்து 636. அம்பத்தூர்: 3 லட்சத்து 34 ஆயிரத்து 46. மாதவரம்: 4 லட்சத்து 26 ஆயிரத்து 133.  மொத்த வாக்காளர்கள் 33 லட்சத்து 08 ஆயிரத்து 252. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் - நீக்கல் - திருத்தல் மனுக்கள் தொடர்பான சிறப்பு முகாம் வருகின்ற ஜனவரி 4, 05, 11, 12 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சா வடி மையங்களிலும் நடை பெறுகிறது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பதற்றத்தை உண்டாக்கியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுக பி.ஆர்.நடராஜன்  எம்.பி. வலியுறுத்தல்   
சத்தியமங்கலம், டிச. 23- ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மகத்தான தோழர் ஏ.எம்.காதரின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி மக்கள் கோரிக்கை மாநாடு, பொதுக்கூட்டம் சத்தியமங்கலத்தில் நடை பெற்றது. இதில் ் பி.ஆர்.நடராஜன் எம்.பி  பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கும், அரசியல மைப்புக்கும் விரோத மானது.எனவே மத்திய அரசு நாடும் முழுவதும் பதற்ற த்தை உருவாக்கியுள்ள இந்த சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.  மேலும், பொதுத்துறை களை தனியார் மயமாக்கி கார்ப்பரேட் முதலாளிக ளின் சொத்தாக மாற்றுவ தும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து மாநில தலைவர்களையும், மக்களையும், ஜனநாய கத்தையும் அழித்து சிறைப்படுத்தி், வீட்டுக் காவலில் வைத்துள்ளதை யும்,தெருக்களில் மக்கள் நடமாட முடியாமல் செய்து ள்ளதையும் வன்மையாகக் கண்டித்தார்.  இவ்வாறு அவர் பேசினார்.