சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு இரட்டை ஆயுள்
திருவள்ளூர் ஆக்ஸ்ட்-22 திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த அன்னம்பேடு பகுதியில் உள்ள செங்கல் சூளையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யப்பன் மகன் கிருஷ்ணா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி உள்ளிட்ட பலர் அங்கு தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி அனைவரும் செங்கற் சூளைக்கு சென்றுவிட கிருஷ்ணா என்ற இளைஞர் பக்கத்துவீட்டில் இருந்த செல்வியின் வீட்டிற்குள் புகுந்து 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடு மையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து செல்வி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி பரணிதரன் வியாழனன்று (ஆக.22) தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையும், அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த குற்றத்திற்காக 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்கவேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். தீர்ப்புக்குப் பின் கிருஷ்ணாவை காவல்துறை யினர் புழல் சிறையில் அடைத்தனர்.
உடல்நலக் கவனிப்பு சேவை தொழில்நுட்ப மாநாடு
சென்னை,ஆக.22-தொழில்நுட்பம், நம்முடைய வாழ்க்கையிலும் உடல்நல சிகிச்சையிலும் முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகிறது என்றால் அது மிகையில்லை. தொழில்நுட்பமானது, உடல் சிகிச்சை பராமரிப்பில் மிகத் துரிதமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்கால மருத்துவ முன்னேற்றங்கள் குறித்து மருத்துவ சேவை வழங்குபவர்கள் கற்றுக்கொள்வதற்கும் தகவல் தொழில்நுட்பம், மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள், செயல்முறைகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அறிந்துகொள்ளவும் காவோடெக் 2019 மாநாடு சென்னை ஐஐடி வளாகத்தில் செப்.27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனை மாநாட்டு அமைப்புக் குழு தலைவர் சமீர் மேத்தா தெரிவித்துள்ளார்.. காவோடெக் என்பது மருத்துவசேவை ஆற்றுவோர் மற்றும் மருத்துவ உபகரணங்களை தயாரிப்போர் கூட்டு அமைப்புஆகும். இந்த அமைப்பின் சார்பில் நடைபெற வுள்ள இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 10 ஆயிரத்திற்கும்மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர் என்று அமைப்பின் தலைமைச் செயல் அலுவலரும் காவோ டெக் தமிழ்நாடு மாநில பிரதிநிதியுமான பாரதி ரெட்டி கூறினார்.
செயற்கையான அயோடினை உப்பில்சேர்க்க எதிர்ப்பு
சென்னை,ஆக. 22-அயோடைடு உப்பை பயன்படுத்தும் பொதுமக்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டால் பாதகமான விளைவுகளை அறியமுடியும் என்று பெரு நிறுவனங்களை எதிர்த்துப்போராடும் நுகர்வோர் ஆர்வலர் சிவ் சங்கர்குப்தா கூறியுள்ளார். இயற்கை உப்பில் மிதமான அளவு அயோடின் உள்ளது. எனவே செயற்கை அயோடின் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் உப்பு சுத்தி கரிக்கப்பட்டு இயற்கையாகவே இருக்கும் அதன் அத்தியாவ சிய கூறுகைளை அகற்றும்போது உப்பு உற்பத்தி யாளர்கள் செயற்கை அயோடினை அதில்சேர்த்து சந்தைப்படுத்துகின்றனர் என்று அவர் கூறினார். அயோடைஸ் உப்பு பொட்டாசியம் ஃபெரோசியானைடு போன்ற நச்சு சேர்மங்களை கொண்டது. இந்த உப்பை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இது அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பதாக நிறுவனங்கள் கூறினாலும் அது நச்சுத்தன்மை கொண்டது என்று அவர் கூறினார்.
நகை கொள்ளை
திருவள்ளூர், ஆக. 22 -திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமய்யா. விவசாயி யான இவர் புதனன்று (ஆக.21) இரவு வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி, மனைவியுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.இந்நிலையில், வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டி ருந்த யசோதாவின் கழுத்திலிருந்த 10 பவுன் நகையை பறிக்க முயற்சித்துள்ளனர். அப்போது விழித்த அவர் மர்ம நபர்களைக் கண்டு கூச்சலிட்டார். உடனே அவர்கள் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால்ராமையாவையும், யசோதாவையும் தாக்கி நகையை பறித்துச் சென்றனர்.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர், ஆக. 22- திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெள்ளியன்று, ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வரு வாய்த்துறை, மின்வாரியம், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைப் பொறியி யல் துறை, மீன்வள த்துறை, கால்நடை பரா மரிப்புத்துறை, வேளாண் விற்பனை,் வணிகத்துறை உள்ளிட்டஅலுவலர்கள் கலந்துகொள்கிறார்கள். எனவே விவசாயிகள் தவறா மல் கலந்து கொண்டுபயன் பெற வேண்டும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.