கூட்டுறவு மற்றும் தனியார் சொசைட்டிகளில் வழங்க வேண்டிய 2 மாத பால் பணப்பட்டுவாடாவை வழங்க வேண்டும், அரசு அறிவித்த பால் கொள்முதல் விலையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்.கே.பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கே.பி.வினாயகம் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் எம்.சிவாஜி, பகுதி நிர்வாகிகள் கண்ணையன், கோபால்ராஜ், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், பொருளாளர் சி.பெருமாள் உட்பட பலர் பேசினர்.