tamilnadu

img

பாதுகாக்கப்பட்ட தண்ணீர் கிடைக்காததால் குட்டை நீரை பருகும் இருளர் மக்கள்

திருவள்ளூர்,ஜூன் 12  திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைக்குளம், கோபாலபுரம், எஸ்.பி.கண்டிகை, சந்தான வேணு கோபாலபுரம் ஆகிய நான்கு ஊராட்சி களில் இருளர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் தேவையை அதிகாரிகள் பூர்த்தி செய்யவில்லை. குடிநீர் ஏற்பாடு இல்லாததால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளை நாடி செல்கின்றனர்.விவசாயத்திற்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் இந்நிலை உள்ளதால், குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இதனால் ஏரி,குளங்களை தேடி அலைகின்றனர். இதில் தாமரைக்குளம் பகுதியில் வாழும் இருளர் இன மக்களின் நிலை மிகவும் மோசம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அங்குள்ள குளத்தில் உள்ள தண்ணீரை தான் குடித்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.சமையல் செய்ய, குடிக்க என அனைத்து தேவைகளுக்கும் பாது காப்பற்ற குளத்து நீரைத்தான் பயன்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். அதிகாரிகளை கேட்டால் ஒரு டேங்கர் (5000-லிட்டர்) தண்ணீர் ரூ.800- வாடகையாக கொடுத்து தண்ணீர் விநி யோகம் செய்வதாக கூறுகின்றனர்.இருளர் இன மக்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கொடுப்பதில்லை.தண்ணீர் வினியோகம் செய்ததாக கணக்கு மட்டும் எழுதுகின்றனர் என அம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் குடிநீர் பிரச்ச னையை தீர்க்கக்கோரி (ஜூன்12) ஆர்.கே.பேட்டை பிடிஒ அலுவல கத்தை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் முற்றுகை யிட்டனர். இதனைத் தொடர்ந்து மேலாளர் செல்வம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, கிருஷ்ணன் ஆகியோர் தலைவர்களை அழைத்து பேச்சு நடத்தினர்.இதில் அடுத்த ஒரு வாரத்தில் மேற்கண்ட பகுதிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின்மோட்டார் அமைத்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தனர்.இதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் என்.வஜ்ஜிர வேலு தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்டச் செயலா ளர் ஆர்.தமிழரசன், பொருளாளர் எஸ்.குமரவேல், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சி.பெருமாள், ஒன்றிய நிர்வாகிகள் கமலி, வடிவேலு, ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;