tamilnadu

img

இந்துஸ்தான்  மோட்டார் கார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஏஐடியுசி சிபிஐ ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரில் இயங்கி வரும் இந்துஸ்தான்  மோட்டார் கார் தொழிற்சாலையில், 173  தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஏஐடியுசி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சி.எம்.மூர்த்தி, ஏ.எஸ்.கண்ணன், மாநில நிர்வாகிகள் கே.ரவி, துரைசாமி, ஜெ.அருள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.