tamilnadu

img

நோய்தான் நமக்கு எதிரி - நோயாளிகள் அல்ல... வெளியிலிருந்து வருவோரை புறக்கணிக்க கூடாது....

திருவனந்தபுரம்:
வெளி இடங்களில் இருந்து வருகிறவர்களை புறக்கணிக்கும் செயல் சில இடங்களில் நடக்கிறது. இது மனிதர்கள் செய்யக்கூடாதது. அவர்களை வரவேற்பதும் தேவையானவற்றை செய்து கொடுப்பதும் நமது கடமை. மனிதாபிமானமே சக்திவாய்ந்த ஆயுதம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

திருவனந்தபுரத்தில் வெள்ளியன்று கோவிட் ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: குறிப்பிட்ட சில சம்பவங்கள் நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்துகின்றன. வருகிற சிலருக்கு நோய் உள்ளது. அவர்களை புறக்கணிக்க கூடாது.தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாக்க வேண்டும். கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளிகள் அல்ல நமக்குநோய்தான் எதிரி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நோயை தடுத்து நிறுத்துவதற்கான மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் மனிதாபிமானமாகும். அவர்கள் மீதான கவனிப்பும், கருணையும்மேலோங்கினால் மட்டுமே இந்த சூழ்நிலையிருந்து மீண்டுவர முடியும் எனவும் முதல்வர் கூறினார்.

;