tamilnadu

திருவண்ணாமலையில் 1717 வாக்குச்சாவடிகள்

திருவண்ணாமலை, ஏப். 17- திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் இன்று (ஏப்.18) மக்கள் வாக்களிக்க உள்ளனர். 1717 வாக்குச்சாவடிகளில் 14 லட்சத்து 70 ஆயிரத்து 203 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதேபோல் ஆரணி மக்களவைத் தொகுதியில் 1756 வாக்குச்சாவடிகளில் 14 லட்சத்து 45 ஆயிரத்து 781 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வங்கி பாஸ் புத்தகம், ஆதார் அட்டை, 100 நாள் வேலை அட்டை, பான்கார்டு உள்ளிட்ட, 12 வகையான ஆவணங்களை வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தல் நடைபெறும் இன்று (ஏப்.18) திருவண்ணாமலையில் சித்திரை பவுர்ணமி நிகழ்வு நடைபெறுவதால், அதற்காக தென்னக ரயில்வே சிறப்பு இரயில் ஒன்றை இயக்குகிறது. வியாழனன்று (ஏப்ரல் 18) இரவு 9. 45 க்கு வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து புறப்படும் இரயில், இரவு 11. 25க்கு திருவண்ணாமலைக்கு வந்து சேரும். நாளை (வெள்ளிக்கிழமை) ஏப்ரல் 19 அதிகாலை 4 மணிக்கு புறப்படும் இரயில் காலை 5.55 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்டிற்கு சென்று சேரும். சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 19ஆம் தேதி) திருவண்ணாமலை நகரில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

;