tamilnadu

திருவண்ணாமலை, புதுச்சேரி, கன்னியாகுமரி முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் கிராம திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

புதுச்சேரி, செப். 4- தேசிய  ஊரக மேம்பாட்டுத்துறையின் கீழ்  உள்ள  வட்டார வளர்ச்சித்துறையில் 100 நாள்  வேலைவாய்ப்பு திட்டப்பணி செய்து வரும்,  கிராம ரோஸ்கார் சேவக்குகள் ஊழியர்கள்  கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த ஊதி யத்தில் பணி புரிந்து வருகிறார்கள். இப்பணி யில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஊதி யத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று  அரசு ஊழியர் சம்மேளன வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட் டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கிராம ரோஸ்கார் சேவக்குகளுக்கு ஊதிய உயர்வு  ரூ. 5 ஆயி ரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிராம  திட்ட ஊழியர்களுக்கு 7500 ரூபாயி லிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. அதேபோல் தொழில்நுட்ப உதவி யாளர்களுக்கு 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும், பதிவேற்றுபவர்களுக்கு 11,000  ரூபாயிலிருந்து, 16,000 ரூபாயாகவும் உயர்த்  தப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு அறிவித்த முதல்வர் நாரா யணசாமி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  கமலக்கண்ணன், துறைச்செயலர் அசோக் குமார், இயக்குநர் ரவிபிரகாஷ், அரசு ஊழி யர் சங்கங்களின் சம்மேளன கவுரவத்தலை வர் ஆகியோருக்கு புதுச்சேரி கிராம திட்ட ஊழி யர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரி வித்துள்ளனர். மேலும் ஊரகவளர்ச்சித்துறையில் உள்ள  காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று  சங்கத்தின் தலைவர் ராஜ்குமார், செயலாளர்  கருணைபிரகாசம் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளனர்.

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

திருவண்ணாமலை,செப். 4- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர்  விவசாயி சம்பத் (59). இவர் அதே கிரா மத்தை சேர்ந்த திருமலை என்பவரது விவ சாய நிலத்தில் புதனன்று (செப். 4) ஏர் ஓட்டச் சென்றார். பின்னர் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது விவ சாய நிலத்தில் தாழ்வாக அறுந்து தொங் கிய மின்சார ஒயர் எதிர்பாராத விதமாக சம்பத் மீது பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட  சம்பத் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அனக்காவூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

நாகர்கோவில், செப்.4- கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள்  கோதையாறு, மருதம் பாறை, சிற்றார், மைலார், மணலோடை, காளிகேசம், கீரிப்பாறை, குற்றியார், பரளி யாறு உள்ளிட்ட 9 மண்டலங்களிலும் அரசு ரப்பர் கழக தொழிற்சாலைகள், கீரிப்பாறை,  மைலார் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இங்கு 3000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை 454 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.  அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டு களுக்கு ஒரு முறை சம்பள பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன்படி கடந்த 2016 டிசம்பர் முதல் சம்பளம் உயர்த்தப்பட வேண்டிய நிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகள்  அதிகாரிகளை சந்தித்து பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த 30 ஆம்  தேதி  நாகர்கோவிலில் தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதைதொடர்ந்து சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.  அதனடிப்படையில் திங்களன்று அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது. செவ்வா யன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் அதிகாரி அப்துல் காதர் சுபேர், அரசு ரப்பர் கழக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் . பேச்சுவார்த்தை யின்போது முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்டதுறை அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளனர். அவர்கள் வந்ததும் சம்பள பிரச்சனை தொடர்பாக பேசி சுமூக முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரி கூறினார் . இதையடுத்து ரப்பர் தோட்ட தொழி லாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். மேலும் சம்பள பிரச்சனை தொடர்பாக வருகிற 20  ஆம் தேதிக்குள் சுமூகமாக தீர்க்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் துவங்கும் என தொழிற்சங்கத்தினர் கூறினர்.