tamilnadu

img

குடிநீர் வழங்கக் கோரி மறியல்

திருவண்ணாமலை, ஏப். 24-திருவண்ணாமலை மவாட்டம் கலசபாக்கம் அடுத்த கெங்கவரம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக அனைவருக்கும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்கக் கோரியும், கிராம மக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். கலசபாக்கம் அடுத்த கெங்கவரம் பகுதயில் ஐந்தாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கெங்கவரம் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் குடிநீர் குழாய்களில் குடிநீர் கிடைக்கவில்லை. இது குறித்து, அப்பகுதி ஊராட்சி செயலாளரிடம், பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராம மக்கள் தண்ணீருக்காக சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சென்று தண்ணீர் எடுத்துவருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தங்கள் பகுதியில் உடனடியாக ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து அனைவருக்கும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத் துள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி. புதன் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், கிராம பெண்களுமாக 100க்கும் மேற்ப்படடோர், மேல் சோழங் குப்பம் - போளூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலசபாக்கம் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும், போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இரண்டு நாட்களுக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதிகூறியதை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;