கூட்டுறவு சங்க இயக்குநர்களுக்கான சிறப்புக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிறன்று (அக். 6) நடைபெற்றது. கூட்டுறவு மாநிலச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பேசினார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வி.சுப்பிரமணி, பெ.அரிதாசு, காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளை தொடர்ந்து கையிலெடுத்து செயல்படுவோம் என கூட்டுறவு சங்க இயக்குனர்கள் மற்றும் தலைவர்கள் தீர்மானம் இயற்றியுள்ளனர்.