tamilnadu

ஆரணியில் மின்பகிர்மான வட்டம் அமைக்க கோரிக்கை

திருவண்ணாமலை, ஜுன் 13- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை தலை மையிடமாகக் கொண்டு புதிய மின் பகிர்மான வட்டம் துவக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்  பட்டுள்ளதாவது: கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற எரிசக்தி மானி யக் கோரிக்கை விவா தத்தின் போது பதிலளித்து பேசிய அமைச்சர், திரு வண்ணாமலை மின் பகிர்  மான வட்டத்தை இரண்டாகப்  பிரித்து 8.92 கோடி செலவில்  ஆரணியை தலைமையிட மாக கொண்டு புதிய மின்  பகிர்மான வட்டம் துவக்கப்ப டும் என்று அறிவித்தார். திருவண்ணாமலை மின்  பகிர்மான வட்டம் 8 கோட்டங் களை உள்ளடக்கியதும், தமிழகத்தின் மிகப்பெரிய வட்டம் ஆகும். தமிழகத்தில் பெரும்பான்மையான மின் பகிர்மான வட்டங்களில் 4 அல்லது 5 கோட்டங்கள் மட்டுமே உள்ளன. திரு வண்ணாமலை தலைமைய கத்தில் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் இயங்கு வதால்  செய்யார், வெம்பாக்  கம், ஆரணி, சேத்பட் மற்றும்  வந்தவாசி ஆகிய தாலுக்கா விலிருந்து பல கிலோமீட்டர் பயணம் செய்து மக்கள் வர வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள்,  விவசாயிகள் நலன் கருதி  புதிய மின் பகிர்மான வட்டத்தை உடனடியாக துவக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;