tamilnadu

வி.கைகாட்டியில் சாலையை  விரிவாக அமைக்க கோரிக்கை

அரியலூர், ஜூலை 25- அரியலூர் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இளநீர் வியாபாரியான இவர் இளநீர்  கொள்முதல் செய்வதற்காக ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார். அப்பொழுது பின்னே வந்த லாரி மோதியதில் சம்பவ  இடத்தில் உடல் சிதைந்த நிலையில் உயிரிழந்தார். இச்சம்ப வம் குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலைக்காக சாலை விரிவாக்கப் பணி நடைபெறும்  நிலையில் மாற்று வழியை விரிவானதாக அமைக்காமல் விட்ட தால் குறுகலான பாதையில் கனரக லாரிகள் செல்ல முடிய வில்லை. இது சாலையில் செல்வோருக்கு விபத்தை ஏற்ப டுத்துகிறது என புகார் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ள னர்.  வி.கைகாட்டி பகுதி சிமெண்ட் தொழிற்சாலை பகுதி என்ப தால் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. ஆகையால் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியாளர்கள் மாற்றுப்பா தையை விரிவானதாக அமைத்து தொடர் விபத்துகளை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.