tamilnadu

img

வன்கொடுமையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய மாவட்ட ஆட்சியர்: மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு

திருவண்ணாமலை, ஆக. 1- திருவண்ணாமலை மாவட்டத்தில் வன்கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி அரசு வேலை வழங்கினார்.  ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்த்தப்பட்ட, பட்டிய லின மக்கள் மீது வன்கொடுமை தாக்கு தல்கள் நிகழ்த்தப்பட்டு, அந்த தாக்குதல்க ளில் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்த  போதெல்லாம், தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்று களம் கண்டது. பாதிக் கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் வன்கொடுமை சம்ப வத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு அரசு வேலைக்கான பணிநியமன சான்றை மாவட்ட ஆட்சியர் அண்மையில் வழங்கினார்.

அரவணைத்த செங்கொடி
அரசு வேலை பெற்றவர்களில் ஒருவ ரான காட்டுத் தெள்ளூர் வெங்கடேசன் கூறு கையில், பழங்குடியினத்தை சேர்ந்த நாங்கள் தெள்ளுர் கிராமத்தில் உள்ள 70 செண்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தோம். அந்த காரணத்திற்காக அதே பகுதியில் 4 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வந்த  பிற சமூகத்தினர், நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் என் மனைவி சசிகலாவை அடித்துக்  கொலை செய்தனர். என் மனைவி மரணத்  திற்கு பிறகு ஆதரவின்றி நாங்கள் நிர்கதி யாய் தவித்தோம். அப்போது, தேசத்தின் கொடிகளெல்லாம் தள்ளி நின்று வேடிக்கை  பார்த்தபோது, செங்கொடி மட்டும்தான் எங்களை பாதுகாத்து அரவணைத்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எங்கள் சமூகம்  வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளது என்றார்.

நெஞ்சார்ந்த நன்றி
புளியரம்பாக்கம் ஆதிகேசவன் கூறு கையில், செய்யாறு வட்டம் புளியரம்பாக்கம்  கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர்,  வேறு சாதி பெண்ணை காதலித்தார் என்ப தற்காக கடந்த 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் என்னையும் எனது சகோதரனையும் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர். அந்த வன்கொடுமை தாக்குதலில் எனது  சகோதரர் வெங்கடேசன் படுகொலை செய்  யப்பட்டார். எங்கள் கிராமமே சூறை யாடப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எங்க ளுக்கு துணை நின்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவளித்த அரசியல் இயக்கங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

மாவட்ட ஆட்சியருக்கு நன்றி
கார்த்திக் என்பவர் கூறுகையில், தந்தையை இழந்து தவித்துவந்த என்னை யும், என் சகோரதன் கலையரசனையும் எங்கள் தாயார் வளர்த்து வந்தார். நடப்பு  ஆண்டு பிப்ரவரி மாதம் வில்வாரணி அரசு  மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள மைதா னத்தில், எனது சகோரதன், நண்பர்களு டன் கைப்பந்து விளையாடிக் கொண்டி ருந்தார். அப்போது அந்தவழியாக சிலர்,  பைக்கில் அதிவேகமாக வந்து சென்றுள்ள னர். அப்போது எனது சகோதரன் கலை யரசனும், அவரது நண்பர்களும் வண்டியை  நிறுத்தி “ஏன் வேகமாக போறீங்க, குழந்தைங்க நடந்து போற இடம், கொஞ்சம்  மெதுவாக போங்க” என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நீ  எப்படி எங்களை தடுக்கலாம் என்றுகூறி,  கத்தியால் குத்தி கொலை செய்தனர்.  சமூகத்தில் தாழ்த்தப்பட்ட நிலையிலும்,  தற்போது கொரோனா கால வறுமையிலும் தவித்து வந்த எங்களின் குடும்பங்களை, வாழ்விக்கும் வகையில் எங்களுக்கு அரசு வேலை வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். அதேபோல் செய்யாறு அடுத்த தென்  தண்டலம் பிரகாஷ், மேல்நெமிலி சகுந்தலா, நந்திமங்கலம் ரேணுகாம்பாள், புழுதியூர் வளர்மதி உள்ளிட்டோருக்கும், மாவட்ட அட்சியர் அரசுப் பணிக்கான சான்றை வழங்கினார். வன்கொடுமை சம்பவத்தால், பாதிக்கப்பட்ட தங்களுக்கு ஆதரவளித்த இயக்கத்தினருக்கு பணி நியமன சான்று பெற்றவர்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி.செல்வன், சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீர பத்திரன், திருவண்ணாமலை நகரச் செய லாளர் எம்.ரவி, விசிக செய்யாறு தொகுதிச்  செயலாளர் குப்பன் (எ) வெற்றிவளவன், வேட்டவலம் நகரச் செயலாளர் வழக்கறிஞர்  எ.கண்ணதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

;