திருவண்ணாமலை, ஜுன் 22- திருவண்ணாமலை மாவட்டம் கலசப் பாக்கம் தாலுகா துருகம் கிராமத்தில் வசிப்பவர் செல்வம் (25). கலசப்பாக்கம் தாலுகா எஸ்.எம். நகரில் வசிப்பவர் சரவணராஜி (25). இவர்கள் இருவரும் கலசப்பாக்கம் தாலுக்கா புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (24) என்பவரிடம் காவல் துறையில் காவலர் வேலை வாங்கித்தருவதாக ரூபாய் 2,25,000 வாங்கிக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக சிவகுமார் அளித்த புகா ரின்பேரில் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரித்ததினர். விசாரணையில் இதேபோல் 21 நபர்களிடம் காவல் துறையில் காவலர் பணி வாங்கித் தருவதாக சுமார் 30 லட்சம் ரூபாய் ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 கார் 21 நபர்க ளின் அசல் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர்.