tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை வெள்ளரவெள்ளியில் இளைஞர் கைது

அவிநாசி, பிப். 19- குன்னத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டார். குன்னத்தூர் அடுத்த வெள்ளரவெளி பகுதியைச் சேர்ந்த வர் நபி மகன் அப்பாஷ் (32). திருமணமான இவர், அதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலி யல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி, அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில், அவிநாசி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.