tamilnadu

திருப்பூர் சக்தி விருது: பெண் படைப்பாளிகளுக்கு அழைப்பு

திருப்பூர், மார்ச் 15 – கலை இலக்கியம் மற்றும் சமூக மேம்பாட் டுப் பணிகளில் ஈடுபடும் சிறந்த பெண் படைப் பாளிகளுக்கான சக்தி விருது  2020க்கு விண்ணப் பிக்கும்படி அழைப்பு விடப்பட்டு உள்ளது. இது குறித்து திருப்பூர் சக்தி விருது 2020 குழு வினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில் வெளி வந்த நூல்களின் இரு பிரதிகளை அனுப்பலாம். பிற துறை சார்ந்தவர்கள் பற்றிய விபரக் குறிப்பு களையும் அனுப்பலாம். மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் எண் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். ஓசோ இல்லம், 94, எம்ஜி புதூர் 3ஆம் வீதி, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், திருப்பூர் 641604. அலைபேசி: 99940 79600 என்ற முகவரிக்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.