tamilnadu

img

முதன்மை இயக்குனர், தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக

தாராபுரம், ஜூன் 11- முதன்மை இயக்குனர் மற்றும் தலைமை பொறியாளர்  மீது நடவடிக்கை எடுக்க தாராபுரத்தில் சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணி யாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிர்வாகம் 13 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது.   தொழிற்சங்க கூட்டுபேர உரிமைகளை கேலிக்குள்ளாக்கியதுடன்,  நீதி கேட்டு ஜனநாயக ரீதியில் போராடும் சாலைப்பணியாளர்கள் மீது காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்திய முதன்மை இயக்குநர் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோரை கண்டித்து தாராபுரம் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில தலைவர் பால சுப்பிரமணியன் ஆர்ப்பாட்ட நோக்கம் குறித்து பேசினார். கோட்ட செயலாளர் தில்லையப்பன், அரசு ஊழியர்  சங்க வட்டக்கிளை தலைவர் ராஜி உள்பட தாராபுரம்,  மூலனூர், வெள்ளகோயில், மடத்துக்குளம், உடுமலை  கோட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து  கொண்டனர். முடிவில் கோட்ட பொருளாளர் முருகசாமி  நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.