திருப்பூர், அக். 15 - நியாயவிலைக் கடை களில் பயோமெட்ரிக் கருவி யில் தொடர்ச்சியாக ஏற் பட்டு வரும் கோளாறுகளை சரி செய்யாவிட்டால் மாவட்ட வழங்கல் அலுவல கத்தில் பிஓஎஸ் கருவி களை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்து வோம் என சிஐடியு கூட்டு றவுப் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் பி.கௌதமன் விடுத் துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பத் திரிகை செய்திகள் மற்றும் அரசு அதிகாரிகள் உத்தரவு கள் அனைத்திலும் பயோ மெட்ரிக் கோளாறு சரி செய்யப்பட்டது, அனைவ ரும் நியாய விலைக் கடைக ளில் பொருட்களை சுலப மாக பெறலாம் என்று கூறி யுள்ளனர். ஆனால் பயோ மெட்ரிக் கருவி பிரச்சனை இன்னும் சரி செய்யப்பட வில்லை என நியாயவி லைக் கடை விற்பனையா ளர்கள் தெரிவித்தனர்.
இதனால், குடும்ப அட்டை தாரர்களுக்கும், விற்பனை யாளர்களுக்கு வாக்குவா தம் ஏற்படுகிறது. அனைவ ரும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி உள்ளது. இந்த பிரச்சனைகளை உட னடியாக சரி செய்ய வேண் டும். இப்படியே பிரச்சனை நீடிக்கும் பட்சத்தில் அனைத்து பாயிண்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) மெஷின்க ளையும் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.