திருப்பூர், பிப். 19 - தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நீண்ட நாட்களாக வைத்த கோரிக்கையான சூரிய சக்தி மின்விளக்கு புதன் கிழமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. உலக வன அமைப்பு (WWF), வனத்துறை சார்பாக மலைவாழ் மக்களுக்கு சூரிய சக்தி மின்விளக்கு வழங் கப்பட்டது. முதல் தவணையாக சின்னார் பகுதியில் இருக்கக் கூடிய மலைவாழ் மக்களுக்கும், இரண்டாவ தாக திருமூர்த்தி மலைக்கு மேல் பகுதியில் இருக்கக் கூடிய மலைவாழ் மக்களுக்கும் இந்த சூரிய சக்தி மின் விளக்கு வழங்கப்பட்டது. பிப்ரவரி இறுதிக்குள் அனைத்து மலைகிராம செட்டில்மெண்ட்களிலும், அனைத்து வீடுக ளுக்கும் சோலார் மின்விளக்கு பொருத்தப்படும் என்று மாவட்ட வன அலுவலர், டபிள்யூ.டபிள்யூ.எஃப் தொண்டு நிறுவனத்தினரும் தெரிவித்தனர். ஒவ்வொரு குடியிருப்பில் இருந்தும் பிரதிநிதிகளாக 5 பேரை வரவழைத்து, அவர்க ளுக்கு சூரியசக்தி தகடு (சோலார் பேனல்) கொடுத்து புதன் கிழமை துவக்கி வைக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வன் மற்றும் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.