tamilnadu

பட்டுக்கோட்டையார் நகரில் அடிப்படை வசதி கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

திருப்பூர், ஆக. 7 - பட்டுக்கோட்டையார் நகர் பகுதி யில் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருப்பூர் மாநகராட்சி 50ஆவது வார்டு பட்டுக்கோட்டையார் நகர்  பகுதி மக்கள் மற்றும் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கூறியதாவது: பட்டுக்கோட்டையார் நகரில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங் கள் உள்ளன. இதில் பாதிக்கு மேற் பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு இல்லை. தெரு குழாய்கள் மூன்று மட்டுமே உள்ளன. இதில் 8 நாட்களுக்கு ஒருமுறை அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே குடிநீர் வருவதால் போதுமான அளவு குடிநீர் அனைவருக்கும் கிடைப்பதில்லை. எனவே இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதுடன், தண்ணீர்  விடும் நேரத்தை அதிகப்படுத்த வேண் டும். இப்பகுதியில் வீதிக்கு ஒரு பொதுக் குழாய் அமைத்து கொடுக்க வேண் டும்.  பட்டுக்கோட்டையார் நகர் பகுதி யில் 8 பிரதான சாலைகளும், இரண்டு குறுக்கு வீதிகளும் உள்ளன. இதில் சாக்கடை நீர் செல்ல வழியின்றி அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் சாக் கடை நீர் புகுந்துவிடுகிறது. ஆகவே பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில்  சாலையை துண்டித்து குழி தோண்டி போட்டிருப் பதால் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாக்கடை சுத்தம் செய்வதும் தொடர்ச்சியாக நடப்ப தில்லை. இதனால் சாக்கடையை சுத் தம் செய்ய ஆட்களை நியமிக்க வேண் டும். பட்டுக்கோட்டையார் நகர் கோயில் அருகிலும் மேலும் பல இடங் களிலும் குப்பை அள்ளாமல் குவிந்து கிடக்கிறது. அவற்றை வாரத்தில் இரண்டு முறை சுத்தப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலைகள் போட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல இடங்களில் சாலை குண்டும், குழியு மாக உள்ளது. புதிய சாலைகள் போடு வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினைகள் தொடர் பாக பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் அலுவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிடுவார்கள். ஆனால் அதன்பின்னர் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. ஆகவே இது  தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.

;