tamilnadu

img

அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் செயல் திறன் பயிற்சி

அவிநாசி, ஜன. 5- குன்னத்தூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறி வியல் செயல் திறன் பயற்சி முகாம் செவ்வாயன்று நடைபெற்றது. 1956 ஆம் ஆண்டு காமராஜரால் திறக்கப்பட்ட குன்னத்தூர் ந.ர.கருப்பண்ண நாடார் கல்வி நிலைய (அரசு உதவி பெறும் பள்ளி) முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர், கோவை ஏ.பி.ஜே அப்துல்கலாம் விஷன் 2020 அமைப்பு, நேரு கல்வி குழுமம் ஆகியவை சார்பில் அறிவியல் செயல் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அப்துல் கலாம் அமைப்பின் பேராசிரியர்கள் விஜயராஜகுமார், சுடர்மணி செந்தில்குமார், பொறியாளர்கள் மனோராஜபால், ஜெய குமார், சந்திரபாபு, ஹரிகரன், ஜென்கின், அபிஷேக் ஆகி யோர் விமான மாதிரிகளைக் கொண்டு செயல் விளக்கம் அளித்தனர். ஆள் இல்லாத விமானம் பறக்கும் விதம், ரோபோ, செயற்கைகோள், ஏவுகணை, ஆகாய விமா னம், பேசும் ரோபோ உள்ளிட்டவைகளின் செயல் பாடுகள், மின்னணு எந்திரங்களின் உற்பத்தி மற்றும் பயன் பாடுகளும் விளக்கப்பட்டன.  அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் உஷாராணி, தீபா, சரஸ்வதி கல்வி நிலைய தாளாளர் வி.மணி, தலைமை யாசிரியர் கே.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு உதவி பெறும் ந.ர.கருப்பண்ண நாடார் கல்வி நிலையம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சரஸ்வதி கல்வி நிலையம் ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியினை முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் கண்ணன் (எ) கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஏ.கிருபாகரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

;