அவிநாசி, ஜூலை 22- அவிநாசியை அடுத்த சேவூரில் திங்களன்று பள்ளி வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானர். அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சிக்குட்பட்ட தேவேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த வேலுமணி என்ப வரின் மகன் பாலசுப்பிர மணி. இவர் திங்களன்று குன்னத்தூர் சாலையில் அங் காளம்மன் கோயில் அரு கில் வளைவு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த தனியார் பள்ளி வாகனத்தின் மீது எதிர் பாராத விதமாக அவரின் வாகனம் மோதி விபத்துக் குள்ளானது. இதில் படுகா யமடைந்த பாலசுப்பிர மணியை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு அவி னாசி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். ஆனால், மருத்துவ மனை செல்லும் வழியி லேயே பாலசுப்பிரமணி உயிரிழந்தார். இதுகுறித்து சேவூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.