districts

img

விஷ வாயு தாக்கி வாலிபர் பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 16 - விஷ வாயு தாக்கி பலியான வாலிபரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பு குப்பம் தலித் பகுதியை  சேர்ந்தவர் ஓட்டுநர் ஹரி (வயது 31). இவருக்கு மாற்றுத் திறனாளி மனைவியும், 3 வயது மகளும் உள்ளனர். ஓட்டுனர் ஹரி வேலை கிடைக்காத நேரங்களில், கிடைக்கும் வேலை களை செய்து வந்தார். இதன்படி ஜூலை 12 அன்று சிப்காட் தொழிற் பேட்டையில் ஸ்வான் என்டர்பிரைசஸ் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது ஹரி திடீரென மயக்கம் அடைந்தார். இதனையடுத்து அவர் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை கொண்டு சென்றபோது, பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் த.கன்னியப்பன்,  பொருளாளர் எம்.சிவக்குமார், மாநில குழு உறுப்பினர்கள் பி.ஆர்.முரளி, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.பத்மா, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் டி.மதன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஜூலை 14 அன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதன்பின் செய்தியாளரிடம் பேசிய முன்னணியின் நிர்வாகிகள், ஹரி மரணத்திற்கு காரணமான தனி யார் தொழிற்சாலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவரது குடும்பத்திற்கு சட்டப் படி 10 லட்சம்  ரூபாய் இழப்பீடு வழங்குவ தோடு, அவரது மனைவி தமிழ் செல்விக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.