districts

img

கோகுல்ஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, ஜன. 25- செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கொலை செய்யப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீ குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீ குடும்பத்திற்கு நீதி கேட்டு செவ்வாயன்று (ஜன.24) பழைய பேருந்து நிலை யத்தில் அனைத்து கட்சி சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல் பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ கொலைக்குப் பின்பு, கொலைக் கான சாட்சியத்தை மறைக்கும் நோக்கத்தில் சிறுவனின் அம்மாவை கடத்தி சித்திரவதை செய்து மிரட்டிய மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்  சிவக் குமார் உட்பட, அவருக்கு துணை புரிந்த அனைவரையும் விசார ணைக்குட்படுத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.  கோகுல்ஸ்ரீ படுகொலைக்குப் பின்பு, இணை இயக்குநர் கொடுத்த விசாரணை அறிக்கையை மறைத்து உண்மைக்குமாறான ஒரு அறிக்கையை கொடுத்து, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கா மல் செயல்பட்ட சமூகநலத் துறையின் இயக்குநர்  வளர்மதி செயல்பாட்டிற்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அவர் மீது தமிழ்நாடு அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.  சிறுவன் கோகுல்ஸ்ரீ கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி களை  பாதுகாப்பதற்காக உயர்மட்ட அரசு அலுவலர்கள், மறை முகமாக தலையீடு செய்து வரும் நிலையில்  கோகுல்ஸ்ரீ படுகொலை வழக்கு அதிகாரம் படைத்தவர்களால் நீர்த்துப் போகச் செய்ய வாய்ப்புள்ளதல்  தமிழ்நாடு அரசு இந்த வழக்கினை சிபி சிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது. கொலை செய்யப்பட்ட சிறு வனின் குடும்பம் வசிப்பதற்கு வீடு இல்லை.

குப்பைமேட்டில்  குடிசை யில் வாழ்ந்து வருகிறார்கள். அந்த குடும்பத்திற்கு குடியிருக்க தமிழ்நாடு முதல்வர் நிரந்தரமான வீடு வழங்க வேண்டும், சிறுவனின் அம்மாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிவாரணமாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்.    செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்திலுள்ள சிறுவர்கள் தாக்கப்படுவது , சித்திரவதை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிரந்தரமாக தடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் இரா.வேல்முருகன் பேசினர்.   சிபிஎம் மாவட்டசெயற்குழு உறுப்பினர் இ.சங்கர்,தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகி செந்தமிழ் குமரன், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கி ணைப்பு குழு நிர்வாகி ரெஜி, மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் ஆசிர், தமிழ்நாடு குழந்தை உரிமை கள் கண்காணிப்பகம் ஒருங்கி ணைப்பாளர் கிருஷ்ணவேனி,  தமுமுக மாநில அமைப்பு செய லாளர்  சிவகாசி முஸ்தபா, திமுக மாவட்ட பிரிதிநிதி ராஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  நகர செயலாளர் ரவீந்தரன்,  மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் டி.முகமது யூனுஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.