tamilnadu

img

ஜியோ செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர், நவ. 20 - திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட 3ஆவது வார்டு தியாகி குமரன் காலனியில் ஜியோ நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்க அப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர். தியாகி குமரன் காலனியில் உள்ள  தனியாருக்கு சொந்தமான கட்டிடத் தில் ரிலையன்ஸ் ஜியோ செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. ஆனால் பொது மக்களுக்கும், சுற்று சூழலுக்கும் கேடு ஏற்படுத்தும் இந்த செல்போன் கோபுரத்தை இப்பகுதியில் அமைக்கக் கூடாது என்று மக்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் 15 வேலம்பாளையம் காவல் நிலையத் தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வீட்டு மனைக ளுக்காக மட்டுமே அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் தனியார் ஒருவர் லாப நோக்கில் அவருடைய கட்டிடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி வழங்கி உள்ளார்.  இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுவதுடன், சுற்று சூழலுக் கும் கேடு விளைவிக்கும். மேலும் கோபுரம் சாய்ந்து கீழே விழுந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்ப டும். எனவே இப்பகுதியில் செல் போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதேசமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தார், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் மீது புகார் அளித்த னர். இதையடுத்து புதனன்று காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். இதில் இந்த பிரச்சனை தொடர்பாக வட்டாட்சியர் கவனத்துக்குக் கொண்டு சென்று முடிவு காணும்படி காவல் துறையினர் கூறினர்.  வட்டாட்சியர் இப்பிரச்சனையில் மக்கள் நலன் பாதுகாக்கும் வகையில் ஜியோ செல்போன் கோபுரம் அமைப் பதை தடை செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர். காவல் நிலையத்தில் பொது மக் களுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.மாரப் பன், கட்சி கிளைச் செயலாளர் பாண் டுரங்கன் உள்ளிட்டோர் உடன் வந் திருந்தனர்.

;