திருப்பூர், மார்ச் 14- இந்திய அஞ்சல் துறை சார்பாக போஸ்ட் பேமெண்ட்ஸ் (IPPB) என்ற வங்கி துவங் கப்பட்டுள்ளது. போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்குவது எளிதாக்கப் பட்டுள்ளது. பேப்பர் லெஸ் பேங்கிங் முறை யில் ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் கைவிரல் ரேகை மூலம் ரூ.100 செலுத்தி உடனடியாக கணக்கு துவங்கலாம். இந்த கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்பு தொகை ஏதும் இல்லை. இந்த கணக்குடன் அஞ்ச லக சேமிப்பு கணக்கை இணைத்து கொள் ளலாம்.மேலும், PPF, செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் RD கணக்கிற்கு IPPB மொபைல் செயலி மூலம் பணம் செலுத்த லாம். இதேபோல், மின்சாரம், தொலைபேசி கட்டணம், DTH மற்றும் மொபைல் ரீசார்ஜ், மற்ற வங்கிகளுக்கு பண பரிவர்த்தனை (NEFT) போன்ற சேவைகளை இலவசமாக பயன்படுத்தலாம். எரிவாயு மானியம், 100 நாள் வேலை திட்ட ஊதியம், மாணவர்க ளின் உதவித்தொகை போன்ற அனைத்து அரசு மானியம் மற்றும் உதவித்தொகை களை இந்த கணக்கில் பெற்றுக் கொள்ள லாம். AEPS எனப்படும் ஆதார் சேவை மூலம் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்தும் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயி ரம் வரை பணம் எடுக்கலாம். இந்த சேவை அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் துவங்கப்பட்டுள்ளது.