திருப்பூர், ஆக. 7- தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை நிகழ்த் திய வெள்ளகோவில் நக ராட்சி ஆணையரை கைது செய்ய வலியுறுத்தி காத்தி ருப்புப் போராட்டம் நடத் துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கயம் வட் டாட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
வெள்ளகோவில் நகராட்சிக்கு உள்பட்ட சொரியங்கிணத்துப்பாளையம்a பகுதியில் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியன்று வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் சசி கலா என்பவர் அப்பகுதி மக்களின் வீடுக ளுக்குச் சென்று, மாட்டிறைச்சி சமைத்ததா கச் சொல்லி, வீட்டில் இருந்த உணவில் பினா யில் ஊற்றி அழித்திருக்கிறார்.
இது தொடர் பாக அவரை வன்கொடுமை தடுப்புச் சட் டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, தலித் விடு தலை இயக்கம் சார்பில் புகார் அளிக்கப் பட்டது. இதையடுத்து, அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அவரை கைது செய்ய வலியுறுத்தி ஆக.7ஆம் தேதி யன்று (வெள்ளியன்று) வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக தலித் விடு தலை இயக்கம் மற்றும் தோழமை அமைப்பு கள் அறிவித்திருத்தன.
இதுதொடர்பாக, காங்கயம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஏ.ஆர்.சாந்தி தலைமையில் வியாழனன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், இப்பிரச் சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிப்பதாகக் காங்கயம் வட் டாட்சியர் கூறியுள்ளார். இக்கூட்டத்தில், தலித் விடுதலை இயக் கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.கருப் பையா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் காங்கயம் பகுதி தலைவர் பி.செல்லமுத்து உள்ளிட்ட பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.