திருப்பூர், நவ. 5 - திருப்பூர் மாநகராட்சி 2ஆவது வார்டு ஆத்துப்பாளை யம் பகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ சக்தி நகரில் பொது மக்க ளுக்கு மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் நடைபெ றவில்லை என்று அப்பகுதி மக்கள் முதல் மண்டல அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி 2ஆவது வார்டு ஆத்துப்பா ளையம் பகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ சக்தி நகரில் கடந்த ஆறு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்ப டுவதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்ற னர். எனவே, அப்பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீ ரைத் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆத்துப்பாளையம் கிளைச் செயலாளர் ஜெ.சங்கர் தலை மையில் மாநகராட்சி முதல் மண்டல உதவி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கே.மாரப்பன், ஆர்.காளியப்பன், எஸ்.அப்புசாமி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.