tamilnadu

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு நியமன கடிதம்

உடுமலை, டிச. 29- இரண்டாம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலை யில் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நியமன  கடிதம் வழங்கப்பட்டது.  திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள் ளாட்சி அமைப்புகளான உடுமலை, குடி மங்கலம் மற்றும் மடத்துக்குளம் உள்ளிட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடை பெற உள்ளது. உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளில் 254 வாக்குச்சாவடிகள், குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சி களில் 126 வாக்குச்சாவடிகள், மடத்துக் குளம் ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சி களில் 80 வாக்குச்சாவடிகளும் அமைக்கப் பட்டுள்ளன.  உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சித் தலைவர்கள், 26 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் 333 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. 254 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட 72 பொருட்கள் உடுமலை ஒன்றிய அலுவ லகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.  முன்னதாக வாக்குச்சாவடி மையங் களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு தேஜஸ் மஹாலில் பயிற்சி அளிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து பணி நியமன ஆணை பெற்ற அலுவலர்கள் வாக்குச்சா வடி மையங்களுக்கு சென்றனர்.

;