உடுமலை, பிப். 18- உழைப்பாளிகள், விவசாயி கள், சிறுகுறு தொழில்களுக்கு விரோதமான மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து இடது சாரி இயக்கங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. உடுமலை அண்ணா குடியி ருப்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூத னன் தலைமை வகித்தார். இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை தாலுகா செயலாளர் கே.எஸ்.ரணதிவே பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார். இதேபோல், உடுமலை பேருந்து நிலையம், கொல்லப் பட்டரை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் சிபிஎம் நகரச்செயலாளர் கே.தண்ட பாணி, நகரக்குழு உறுப்பினர்கள் வி.விஸ்வநாதன், ராஜா, ஏ.மாலினி, சிபிஐ சார்பில் வி.தங்கவேல்,ஏ.செல்வராஜ், பி.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடுமலை ஒன்றியத்தில் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பி னர் எஸ்.ரங்கராஜ் தலைமை யில் நடைபெற்ற பிரச்சாரம் ஜல்லிபட்டி பகுதியில் தொடங் கியது. தளி, தீலபாலபட்டி, ஜெ.என்பாளையம், கே.வல்ல குண்டாபுரம், எரிசனம்பட்டி மற்றும் கொடிங்கியம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெற்ற இப்பிரச்சார பய ணத்தில் சிபிஎம் ஒன்றிய செயலா ளர் கி.கனகராஜ், முத்துசாமி, ஜெகதீசன்,பழனிசாமி உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி ஆர்.எஸ் பகுதி யில் நடைபெற்ற பிரச்சாரக் கூட் டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கட்சி யின் தாலுகா செயலாளர் கே.ஏ. சிவசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் வி.கே.முத்துசாமி, நிர்வாகக் குழு உறுப்பினர் சின்னசாமி, மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சரஸ்வதி ஆகி யோர் உரையாற்றினர். இரு கட்சிகளின் கிளைச் செயலா ளர்கள் வி.கே.பழனிச்சாமி, ஏ.சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் திரளானோர் பங்கேற்றனர். இதேபோல், பல்லடத்திலும் சுப்பிரமணி தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.