tamilnadu

img

நீதிமன்றங்களை திறக்கக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 2- கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைத் திருத்த கமிட்டி அமைத்திருப்பதைக் கலைக்க வலியுறுத்தியும், பிற அரசுத் துறைகளைப் போலவே தகுந்த பாது காப்பு ஏற்பாட்டுடன் நீதிமன்றங்க ளைத் திறந்து செயல்பட அனுமதிக்கக் கோரியும் திருப்பூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் நீதிமன்ற வளாகத்தின் எதிரில் சனியன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வழக்கறிஞர் வி.கே.சுப்பிரமணி தலைமை வகித் தார். இதில் கோரிக்கைகளை வலியு றுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன் ராம், மத்தியக்குழு உறுப்பினர் அ.மண வாளன், நகரத் தலைவர் ஓ.உதயசூரி யன் மற்றும் செல்வராஜ், செல்வம் உள் ளிட்ட வழக்கறிஞர்கள் உரையாற்றி னர். இதில் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

;