tamilnadu

பெண் தொழிலாளர் தங்கும் விடுதிகளில் வசதி குறைபாடு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சிஐடியு மாநாடு வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 30 – இளம் பெண் தொழிலாளர் தங்கும் தனியார் விடுதிகளில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போது மான அளவுக்கு இல்லாததுடன், ஒரே அறையில் அளவுக்கு அதிக மானோர் தங்க வைக்கப்படு கின்றனர். இத்தகைய குறைபாடு களை அரசு நிர்வாகம் ஆய்வு செய்து அடிப்படை வசதி, பாது காப்பு ஏற்பாடுகளை உறுதிப் படுத்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட சிஐடியு 12ஆவது மாநாடு வலியுறுத்தியுள்ளது. சனியன்று தொடங்கிய  மாநாட்டின் இரண்டாம் நாளில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. குறிப்பாக இந்திய நாட்டில் உள்ள தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள் 44 எண்ணிக்கையை, சீர்திருத்தம் என்ற பெயரில் நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றி, தொழி லாளர் உரிமையை பறிக்கவும், முத லாளிகளுக்கு ஆதரவாக மாற்ற வும் மத்திய அரசு முயற்சிக்கிறது. தொழிலாளர் நலன், அடிப்படை உரிமையைப் பாதிக்கும் இந்த சீர்திருத்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.  முறைசாராத் தொழிலாளர் நலவாரியச் செயல்பாடு முடங்கிய நிலையில் உள்ளது. இதில் அனைத்துத் தொழிலாளர்களைப் பதிவு செய்யவும், நலவாரியப் பலன்கள் முழுமையாகத் தொழி லாளர்களுக்குக் கிடைக்கவும் மாநில அரசு உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். இம்மாவட்டத்தில் பின்ன லாடை உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் வடமாநிலங்கள் உள்பட பிற பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் வந்து பணியாற்றும் சூழ்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்புச் சட் டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மோட்டார் வாகன காப்பீட்டுக்கு அதிக பிரிமியத் தொகை நிர்ணயித்து இத்தொழி லில் ஈடுபடுவோரை நெருக் கடிக்குள் தள்ளும் நடவடிக்கை யைக் கைவிட வேண்டும். உள் ளாட்சி ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். நூற்பாலை களில் கேம்ப் கூலி என்ற பெயரில் முகாம், விடுதித் தொழிலாளர் முறைகளில் ஆயிரக்கணக்கான இளம் பெண் தொழிலாளர்களை சட்ட உரிமை அற்றவர்களாக கடுமையாக வேலை வாங்கும் நிலை உள்ளது. எனவே கேம்ப் கூலி முறையை தடை செய்ய வேண்டும். பணியிடங்களில் பெண் தொழிலாளர் புகார் கமிட் டிகளை அமைத்து பயனுள்ள வகையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும்.

இஎஸ்ஐ மருத்துவமனை
திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவ மனை கட்டுவதாக கடந்த 15 ஆண்டு காலமாக மத்திய, மாநில  அரசுகள் இழுத்தடித்து வருகின் றன. கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிரதமர் மோடி இங்கு வந்து இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிச் சென்றார். எனினும் அதன்பிறகு ஒரு செங்கல்கூட எடுத்து வைக் கப்படாத நிலையே தொடர்கிறது. இனியும் காலதாமதம் செய்யா மல் பல லட்சம் தொழிலாளர் களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிட கட்டு மானப் பணியைத் தொடங்கிட வேண்டும். ஊத்துக்குளியில் உள்ள அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதுடன், இதன் சுற்றுவட்டாரத் தொழிலாளர்கள் பயனடையும் விதத்தில் இப்பகுதியில் இஎஸ்ஐ மருந்தகம் ஒன்றை உடனடியாகத் தொடங்க வேண்டும். திருப்பூர் மாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை யோர வியாபாரிகளை அப்புறப் படுத்த உள்ளாட்சி அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. அவர்களுக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாற்று இடம் வழங்கிய பின் தற்போதைய சாலையோர வியாபார இடங் களை அகற்ற வேண்டும். நலி வைச் சந்தித்து வரும் தையல் கலைஞர்களுக்கு வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்க தொழில் கடனுதவி வழங்க வேண்டும், பல்லடம் வடுகபாளையம் பகுதி யில் கைத்தறி நெசவாளர்கள் பட்டா இடங்களில் வீடு கட்ட  கடனுதவி பெறுவதற்கு உள்ள  தடைகளை நீக்கி வீடு கட்ட  மாவட்ட நிர்வாகம் உத்தரவா தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இம்மாநாட்டை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பிரதிநிதிகள் விவாதத்தின் மீது மாவட்டச் செயலாளர் கே.ரங் கராஜ் தொகுப்புரை வழங்கியதை அடுத்து மாநிலச் செயலாளர் கே.ஆர்.கணேசன் நிறைவுரை ஆற்றினார்.

புதிய நிர்வாகிகள்
இம்மாநாட்டில் திருப்பூர் மாவட்ட சிஐடியு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட தலைவராக கே.உண்ணிகிருஷ்ணன், செய லாளராக கே.ரங்கராஜ், பொருளா ளராக டி.குமார், துணை தலை வர்களாக பி.முத்துசாமி, பி.பாலன், டி.கோபாலகிருஷ் ணன், ஜெ.கந்தசாமி, ஏ.ஈஸ்வர மூர்த்தி, எம்.கணேசன், என்.கனக ராஜ், ப.கு.சத்தியமூர்த்தி, கே.குப்புசாமி, துணை செயலா ளர்களாக சி.மூர்த்தி, எம்.பாக்கி யம், ஜி.சம்பத், ஒய்.அன்பு,  செல்லத்துரை, என்.சுப்பரமணி யம், எஸ்.ஜெகதீசன், எம்.ஆறு முகம், கே.எல்லம்மாள் மற்றும் 39 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.  நிறைவாக ஊத்துக்குளி டவுன் பஸ் நிறுத்தம் அருகே தியாகி அசோக் நினைவுத் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அசோக் குடும்ப பாதுகாப்பு நிதி 
நெல்லையில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட வாலி பர் சங்க நிர்வாகி அசோக் குடும்ப உதவி நிதி சிஐடியு மாவட்ட மாநாட்டு அரங்கில் வசூலிக்கப் பட்டது. இதில் ஒருசில மணித் துளிகளில் ரூபாய் 4,586 வசூ லானது குறிப்பிடத்தக்கது.

;