திருப்பூர், ஜூன் 11 - திருப்பூர் மாவட்டத்தில் பல்லா யிரக்கணக்கான கைத்தறி நெச வாளர்கள் வாழ்வைப் பாதுகாக்க கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டப்படி 11 ரகங்களை கைத்தறியில் மட்டும் நெசவு செய்வதையும், விசைத் தறியில் நெசவு செய்வதைத் தடுத்து நிறுத்தவும் அமலாக்கத் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சங்க கோரிக்கை மாநாடு வலியுறுத்தி உள்ளது. காங்கேயத்தில் பொன்னுசாமி நினைவரங்கில் (கொங்கு ஹால்) மாவட்டத் தலைவர் என்.கோபால் தலைமையில் இம்மாநாடு செவ் வாயன்று நடைபெற்றது. இம் மாநாட்டை சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ் தொடக்கி வைத்தார். சங்கச் செயலாளர் என்.கனகராஜ் கைத்தறி தொழில், சங்க செயல் பாடு குறித்து அறிக்கை சமர்ப் பித்தார். இதையடுத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை கைத்தறியில் உற்பத்தி செய்வதை உறுதிப்படுத்த அம லாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர் வீட்டுக்கு 200 யூனிட் இலவச மின் சாரம் வழங்கினாலும் கூடுதலாக பல நூறு ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் முழுமையாக இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கைத்தறி ஜவுளி அமைச்சகம் வழங்கும் நெசவாளர் அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் அரசின் மானியம் கிடைக்காமல் நலிவைச் சந்தித்து வருகின்றன. உடனடியாக மாநில அரசு அந்த நிலுவை மானியத்தை வழங்கிட வேண்டும். கைத்தறி நெச வாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பல்லடம் வடுகபாளையத்தில் கைத் தறி நெசவாளர்களுக்கு பூமி தான இயக்க நிலத்தில் இருந்து வழங் கப்பட்ட பட்டாவுக்கு ஆட்சியர் தடையின்மைச் சான்று வழங்கி பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் துறையில் பணிபுரியும் கைத்தறி நெசவாளர் களுக்கும் மானியத்துடன் கைத்தறி உபகரணங்கள் வழங்க வேண்டும். நெசவாளர் கடன் திட்டத்தில் ரூ.50 ஆயிரம் கடன் பெற்று குறித்த காலத்தில் முறையாக திரும்பிச் செலுத்தியோருக்கு ரூ.1லட்சம் மானியக் கடன் வழங்க வேண்டும், நலவாரிய செயல்பாட்டில் குளறு படிகளைக் களைந்து நெசவாளர் களின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் என்.கோபால், மாவட்டச் செயலாளர் என்.கனக ராஜ், பொருளாளர் எஸ்.பாண்டு ரங்கன் உள்பட 17 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் திரளான கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் இம்மா நாட்டை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.