tamilnadu

img

மோட்டார் வாகன சட்டத்திருத்தம், கல்விக் கொள்கையை கைவிடுக

புதுச்சேரி, ஜூலை 29- அமைப்புசாரா தொழிலா ளர் நலச்சங்கத்தை நல வாரியமாக மாற்றவேண்டும் என்று சிஐடியு புதுச்சேரி பிர தேச மாநாடு வலியுறுத்தி யுள்ளது. சிஐடியு புதுச்சேரி பிர தேச 11ஆவது மாநாடு சித்தன்  குடியில் உள்ள வி.பி.சிந்தன்  நினைவரங்கில் பிரதேசத் தலைவர் கே.முருகன் தலை மையில் நடைபெற்றது.  புதுச்சேரி பிரதேசத் தலை வராக கே.முருகன், செய லாளராக ஜி.சீனுவாசன், பொருளாளராக என்.பிரபு ராஜ் உள்ளிட்ட 36 பேர் கொண்ட பிரதேசக்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம், தேசிய கல்விக் கொள்கையை மத்  திய அரசு உடனே திரும்பப்  பெற வேண்டும், ஹைட்ரோ  கார்பன் திட்டத்தை   புதுச்சேரி யில் செயல்படுத்துவதை கைவிட வேண்டும், புதுச்சேரி அரசு அமைப்புசாரா நலச் சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும், அரசு  சார்பில் மணல் குவாரிகளை  அமைத்து மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். ஸ்மார்ட்  சிட்டி என்ற பெயரில் சாலை யோர வியாபாரிகளை அப்  புறப்படுத்துவதை கைவிட  வேண்டும். புதுச்சேரி ஏ.எப்.டி.,பாரதி, சுதேசி பஞ் சாலைகளை புணரமைத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்  பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.