tamilnadu

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் நோன்பிருந்து போராட்டம்

திருப்பூர், ஜன. 19 - குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து திருப்பூரில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை நடத்தினர். குடியுரிமைத் திருத்தச் சட்டம் சிறுபான்மையினர் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக உள்ளதால் நாட் டின் பல்வேறு பகுதிகளிலும், தமிழகத்திலும் போராட் டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் குடியு ரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ஐக்கிய சுன்னத் ஜமாஅத் சார்பில் திருப்பூரில் பெரிய பள்ளிவாசல் உட்பட 7 பள்ளி வாசல்களில் 5 ஆயிரம் இஸ்லாமியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது, ஜன.17ஆம் தேதி வெள்ளி யன்று மாலை தொடங்கி,சனிக்கிழமை மாலை வரை நோன்பிருந்து சிறப்பு தொழுகை நடத்திட முடிவு செய்தனர். அதன்படி, திருப்பூர் பெரிய பள்ளிவாசல், மங்கலம் பள்ளிவாசல் உள்பட ஏழு பள்ளிவாசல்க ளில் நோன்பு இருந்து சிறப்புத் தொழுகை நடத்தினர். அத்துடன் இஸ்லாமிய பெண்களும் இந்த கோரிக்கை களை முன்வைத்து வீடுகளில் நோன்பிருந்து தொழுகை நடத்தினர். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை நோன்பு திறக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜமாஅத்துல் உலமா சபை துணை பொதுச்செயலாளர் அப்துல் பாகவி கூறுகையில், ‘குடியு ரிமைத் திருத்தச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி திருப்பூரில் உள்ள ஏழு பள்ளிவாசல்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து தொழுகை நடத்தி வருவ தாகவும், இதன் மூலம் இச்சட்டம் ரத்து செய்யப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

;